ஒரே மாதத்தில் 10 கிலோ உடல் எடை குறைத்த இந்த பெண்ணின் ரகசியம்: என்ன தெரியுமா?
உடல் பருமன் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒருவரின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையின் அளவையும் பாதிக்கிறது.
அந்தவகையில் ஸ்ரேயா என்ற பெண் ஜிம்-க்கு செல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இவரின் எடை இழப்பு ரகசியங்களை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
டயட் ரகசியம்
உடல் எடையை குறைக்க ஸ்ரேயா புரதம் நிறைந்த குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொண்டுள்ளார்.
வெளி உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்த ஸ்ரேயா அன்றாட நாட்களில் அவரின் ஊட்டச்சத்து நிறைந்த உணவு திட்டம் பின்வருமாறு.
Shutterstock
- காலை: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர்.
- காலை உணவு: 1 கிண்ணம் பால் மற்றும் கார்ன் ஃப்ளேக்ஸ்.
- மதிய உணவு: 2 சப்பாத்தி, ஏதேனும் பச்சை காய்கறி, 1 கப் தயிர் மற்றும் 1 கப் பருப்பு
- மாலை: 1 கப் கிரீன் டீ
- இரவு உணவு: சாலட் மற்றும் ஒரு கிளாஸ் பால், டாஸ் செய்த பன்னீர், தந்தூரி சிக்கன் (வாரத்திற்கு ஒரு முறை).
உடற்பயிற்சி ரகசியம்
தினமும் 1 மணிநேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு எடை கட்டுப்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கலோரிகளை எரிக்க உதவுகிறது என்கிறார்.
மேலும் உடல் எடையை குறைக்க தினமும் குறைந்தது பத்தாயிரம் படிகள் நடக்க வேண்டும்.
உடல் எடையை சுலபமாக குறைக்க உயர்ந்த ஜிம், ஆடம்பர ஒர்க்கவுட் ஆடைகள் போன்ற எதுவும் அவசியம் இல்லை. உங்களுக்கு சௌகரியமான ஆடையை அணிந்து நடைப்பயிற்சி செய்தால் போதும்.
ஃபிட்னஸ் ரகசியம்
ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு பிமுன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கலோரி உட்கொள்ளலை கவனித்து ஒரு நாளைக்கு 1000-1500 கலோரிகள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரேயா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |