உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனியாவது முழுசா தெரிஞ்சிக்கோங்க
உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது இருப்பினும் நம்மில் சிலருக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா என்ற சந்தேகம் இருக்கும்.
உண்மையில் உருளைக்கிழங்கின் தோலில் தான் சத்து அதிகம் உள்ளது. இது சில நோய்களை போக்கும் சக்தி படைத்ததாகவும் உள்ளது. அந்தவகையில் இதனை தோலுடன் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிடும் போது, அது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உயர் இரத்த அழுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும். உருளைக்கிழங்கை தோலுடன் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நரம்புகள் தானாக வலிமையடையும். இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லது.
ஏனெனில் உருளைக்கிழங்கின் தோலில் குறிப்பிட்ட அளவு இரும்புச்சத்து உள்ளதால், அது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். உருளைக்கிழங்கின் தோலில் வைட்டமின் பி3, நியாசின் போன்ற சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளது. இது ஒருவரது உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும் உட்பொருட்களாகும்.
ஆகவே தான் உருளைக்கிழங்கை உட்கொண்டால், சோர்ந்து போன உடலும் சுறுசுறுப்பைப் பெறுகிறது.
உருளைக்கிழங்கை தோலுடன் உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளைத் தடுப்பதோடு, குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும்.