வலையில் சிக்கி இறந்த மீன்.. குட்டிகளை மீண்டும் கடலிலேயே விட்டு நெகிழ வைத்த மீனவர்கள்!
இறந்த மீனின் குட்டிகளை கடலிலேயே மீனவர்கள் விட்ட நெகிழ்ச்சியான வீடியோ பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
சென்னையில், காசிமேட்டில் மீனவர் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதன் பின்னர் அந்த மீன் இறந்த சிக்கியதால், அந்த மீனின் வயிற்றை கிழித்து மீனவர்கள் குட்டிகளை மீட்டு மீண்டும் கடலிலேயே விட்டுள்ளனர்.
மேலும், இந்த வீடியோ வைரலாகிய நிலையில், மீனவர்களின் மனிதாபினமான செயலைக்கண்டு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்ததுடன், வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்..
மீனவர்களின் மனிதாபிமானம்!
— Sun News (@sunnewstamil) October 6, 2021
வலையில் சிக்கி இறந்த மீனின் வயிற்றில் இருந்து குட்டிகளை எடுத்து மீண்டும் கடலில் விட்டு காப்பாற்றிய மீனவர்கள்!#SunNews | #Kasimedu | #Fishermen pic.twitter.com/XtToR3eeoi