வானத்தில் இருந்து கொட்டிய மீன் மழை! போட்டி போட்டு மக்கள் செய்த காரியம்
ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவன நகரம் ஒன்றில் திடீரென மீன்மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீரென கொட்டிய மீன் மழை
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் லஜாமனு (Lajamanu). சுற்றிலும் பாலைவனமாக அமைந்திருக்கும் இந்த நகரத்தில் சமீபத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அறிவித்தபடியே கனமழை செய்ய ஆரம்பித்த நிலையில், கூடவே வானத்திலிருந்து மீன்களும் கொட்டியுள்ளது.
மழைக்கு பின்பு அங்கிருந்த சிறுவர்கள் மீன்களை சேகரித்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள லாஜாமானு உள்ளூர் மற்றும் மத்திய பாலைவன கவுன்சிலர் ஆண்ட்ரூ ஜான்சன் ஜப்பானங்கா, "எங்களது நகரத்தை நோக்கி ஒரு பெரிய புயல் வீசுவதை நாங்கள் பார்த்தோம். அது வெறும் மழை என்று நாங்கள் நினைத்தோம்.
இருப்பினும், மழைநீர் மட்டும் கொட்டவில்லை. பலத்த மழையுடன் ஆஸ்திரேலியாவில் மிகவும் பொதுவான நன்னீர் மீனான ஸ்பாங்கல்-ம் பொழிந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுபோன்ற சம்பவம் கடந்த 2010, 2004 மற்றும் 1974லும் நடந்துள்ளது. அதாவது ஆறுகளில் இருந்து நீரையும், மீன்களையும் உறிஞ்சி நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி போன்ற நிகழ்வுகளின் இந்த சம்பவம் நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சாலைகளில் மீன்கள் கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.