நாக்கில் எச்சில் ஊற வைக்கும் மீன் குருமா! எப்படி செய்ய வேண்டும்? ரெசிபி இதோ
மீன் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல மீன் ரெசிபிகள் நமக்கு தெரிந்திருக்கும்.

எனவே அனைவரது வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது மீன் வாங்கி சமைப்பது வழக்கம். அசைவம் என்றால் மீனுக்கு இடமிருக்கும்.
பலரும் மீன் வாங்கினாலே பொதுவாக குழம்பு, வறுவல் என செய்வது வழக்கம். ஆனால் நீங்கள் எப்போதாவது மீன் வைத்து குருமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.
இந்த பதிவில் சொன்னதை போல மீன் குருமா செய்து சாப்பிட்டால் வீட்டில் சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மீன் - 1/4 கிலோ
- புளி - அரை சிறிய நெல்லிக்காய் அளவு
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
- சோம்பு - 3/4 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- அரைக்க தேவையானவை : தேங்காய் - 1/2 மூடி முந்திரி - 6

செய்முறை
முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் அரைத்து மிருதுவான பேஸ்ட் தயார் செய்யவும்.
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். மசாலா தூள்கள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வாசனை போகும் வரை சமைக்கவும்.
அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பிறகு மீன் துண்டுகள் சேர்த்து வேகவைத்து, இறுதியில் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மீன் குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |