மீன் குழையாமல் ருசியாக சமைக்க வேண்டுமா? அப்போ இதை கவனியுங்கள்...
அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பி அதிகமாக சாப்பிடும் உணவு என்றால் அது மீன் தான். மீனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால், மீனை சமைக்கும்போது ரொம்ப பக்குவாக சமைக்க வேண்டும். இல்லையென்றால் மீன் புண்டு குழம்பில் குழைந்துவிடும்.
மீனை பக்குவமாக சமைத்தால் அதன் ருசியே தனிதான்.
கவலை விடுங்கள்... மீன் சமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய வழிகளைப் பார்ப்போம் -
1. முதலில் மீனை வாங்கும்போது பார்த்து, கவனமாக வாங்க வேண்டும். புதிய மீன்களை மட்டுமே எப்போதும் வாங்க வேண்டும்.
2. மீன் கடைகளில் நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், முதலில் மீனின் கண்களைப் பாருங்கள். மீன் கண்கள் பலபலவென இருக்கும் மீன்களை வாங்குங்கள். மேலும், மீன் உடல் தொட்டு பார்க்கும்போது உறுதியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மீனை மட்டும் வாங்குங்கள். துர்நாற்றம் அடிக்கும் மீனை வாங்கக்கூடாது.
3. கெட்டுப்போன மீன்களை வாங்கினீர்கள் என்றால் உணவு நன்றாக இருக்காது. ருசியே போய்விடும்.
4. ஃபிரிட்ஜிலிருந்து மீனை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அரை மணிநேரம் கழித்து தான் மீனை சமைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், மீனை ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே சூடான பாத்திரத்தில் போட்டால் மீன் சரியாக வேகாது. ருசி போய்விடும்.
5. மீன் குழம்பு வைக்கும்போது, குழம்பு இறக்கும் 15 இடங்களுக்கு முன்புதான் மீனை போட வேண்டும். கொதிக்கும் குழம்பில் மீனை போட்டு அதிக நேரம் கொதிக்கவிட்டால், மீன் குழைந்துவிடும்.
6. மீன் குழம்பில் உப்பு போடும்போது கவனமாக போடுங்கள். உப்பு அதிகமாகிவிட்டால் மீன் குழம்பே ருசி போய்விடும்.
7. மீனை வறுக்கிறீர்கள் என்றால், எண்ணெய்யில் கடாயில் மீனை போட்டவுடன் உடனே திருப்பக்கூடாது. மீன் ஒரு பகுதி வெந்தபிறகு தான் மீனை திருப்ப வேண்டும். இல்லையென்றால் மீன் சிதைந்து விடும்.
8. மீன் போன்ற மிருதுவான இறைச்சியை சமைக்கும் போது நேரம் மிகவும் முக்கியம். அதாவது மீனை மிகவும் அதிக நேரம் வேக வைக்க கூடாது. ஒரு மீன் வேக 5 முதல் 7 நிமிடங்கள் போதும். அது மீனின் வகையைப் பொறுத்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |