வாஸ்து மீன்கள் பற்றிய இந்த விடயம் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நம்மில் பலருக்கும் வீட்டில் மீன்களை வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும் உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் மீன்களை பார்ப்பதன் மூலமாக மனம் லேசாகி மன அழுத்தம் குறைவடைகின்றதாம்.
ஒரு சிலர், வீட்டில் நன்மைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவும் மீனகள் வளர்க்க நினைப்பபதுண்டு அப்படி வீட்டில் வளர்க்கக் கூடிய வாஸ்து மீன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்தவகையில் வாஸ்து மீன்களாக பார்க்கப்படுபவை அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் ஃபிஷ் மற்றும் கோய் என்பவை. இவற்றில் அரோனா வகை மீன்களை வீட்டில் வளர்த்தால் வீட்டில் பண மழை கொட்டும் என கூறப்படுகிறது.
வங்கி தொழிலில் இருப்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள், சுய தொழிலில் ஈடுப்படுபவர்கள் இது போன்ற வாஸ்து மீன்களை வீட்டில் வளர்த்தால் பணவிடயத்தில் குறைவே இருக்காது என நம்பப்படுகின்றது.
வாஸ்து மீன்களை வளர்ப்பதால் என்ன நன்மை?
வீட்டில் வாஸ்து மீன்களை வளர்ப்பதால் நம் மீதும் நம் வீட்டில் உள்ளவர்கள் மீதும் படும் கண் திரிஷ்டியை அகற்றுவதாக கூறப்படுகிறது. கண் திரிஷடி என்பது மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இந்துக்கலால் மட்டுமன்றி ஏனைய மதத்தினராலும் பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த வாஸ்து மீன்களால் முடியும் என பலராலும் நம்பப்படுகிறது. மேலும் இந்த வாஸ்து மீன்கள் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியதாகவும் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாக வழிசெய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகுமாம்.
வாஸ்து மீன் தொட்டிகளை வீட்டின் வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் வைக்க வேண்டும். வாஸ்து மீன்கள் வீட்டில், அலுவலகங்களில் திருஷ்டி, இடையூறுகளை தன்னுள் ஈர்த்து உடனிருக்கும் மீன்களை தாக்குவதன் மூலம் வளர்ப்பவருக்கு நன்மையளிப்பதாக நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |