நினைத்தது நடக்கனுமா? அப்போ இப்படி விளக்கேற்றுங்க
அனைவருக்குமே பிரார்த்தனைகள் நிறைவேறி வாழ்வில் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்பதே ஆசை.
அப்படி நாம் பிரார்த்திக்கும் தருணத்தில் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி விளக்கேற்றினால் தமது பிராத்தனைகள் வெகுவிரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அவ்வாறு நமது பிரார்த்தனையை நிறைவேற்றும் இரண்டு பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது முன்னோர்கள் எப்போதும் தீபம் ஏற்றிவைத்து வாசனை நிறைந்த மலர்களால் பூஜை அறையை அலங்கரித்து வாசனை புகையை பரவச்செய்வதற்கு ஊதுபத்திகளை ஏற்றி வைப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் தூய்மையான வாசனை வீசும் இடங்களில் மாத்திரமே தெய்வம் இருக்கும் என்பது நம்பிக்கை.
இந்து சாஸ்திரத்திலும் இவ்வாறே கூறப்படுகின்றது. இவ்வாறு காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி இவ்வாறு வாசனையாக வைத்திருப்பதன் மூலம் எமது மனமும் சாந்தமாக இருக்கும்.
கிராம்பு மற்றும் பச்சை கற்பூரம்
பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு நிச்சயம் இருக்கும். சிலபேர் அகல் விளக்கை ஏற்றுவது வழக்கம், பொதுவாக விளக்கேற்றும் போது எண்ணெய் ஊற்றி பூ வைத்து விளக்கேற்றுவோம்.
இவ்வாறு சாதாரண முறையில் விளக்கேற்றாமல் அத்துடன் கிராம்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியறவற்றை பொடியாக்கி விளக்கேற்றும் எண்ணெயில் கலந்து விளக்கேற்றினால் நல்ல நறுமணம் உண்டாகும்.
இவ்வாறு விளக்கேற்றி வைத்து நாம் பிராத்தனை செய்தால் நாம் நினைத்த காரியம் நமது பிராத்தனை விரைவில் நிறைவேறும் என கூறப்படுகின்றது.
இதுமட்டுமன்றி இந்த நறுமணம் நேர்மறை சக்திகளை ஈர்க்கக் கூடியது. இதனால் உளவியல் ரீதியாகவும் புத்துணர்வு கிடைக்கின்றது.
நல்ல எண்ணங்கள் மனதில் எழ இது காரணமாக அமையும்.மேலும் பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கின்றது. அதன் வாசனை வீசும் இடங்களில் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |