இலங்கை பெண் கூறிய ஒற்றை வார்த்தை: பாசத்தில் கதறி அழுத ADK- என்ன நடந்தது?
பிக் பாஸில் ஜனனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனனி கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தெலைக்காட்சியில் மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது 21 போட்டியாளர்கள் காணப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் மூன்று வாரத்திற்கு மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்களிடையே ஏற்படும் சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை.
பரபரப்பை ஏற்படுத்திய ஜனனி
இந்நிலையில் பிக் பாஸ் ஜனனியிடம் நல்லவர் முகமூடி அணிந்திருக்கும் போட்டியாளர் யார் என கேட்ட போது ADK என பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதில் ADKவை ரொம்ப மனதளவில் பாதித்துள்ளது. 'சொந்த தங்கைப் போல் நினைத்தேன்' என புலம்பி தள்ளியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.