கார்த்திகை முதல் நாளில் பூரண பலனை அடைய வேண்டுமா? இந்த பரிகாரம் அவசியம்
இன்று கார்த்திகை மாதத்தின் முதல் என்பதால் சில ராசிக்காரர்கள் செய்யும் பரிகாரம் பூரண பலனை தரும் என்று கூறப்படுகின்றது.
கார்த்திகை முதல் நாள்
இன்று ஐப்பசி மாதம் முடிந்து முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் தான் சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கும் உகந்த மாதமாகும்.
பஞ்சாங்கப்படி இந்த கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் கீழ் வரும் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது பூரண நலனை தருமாம்.
அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இன்று கார்த்திகை முதல் நாளில், நீராடி அருகில் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வின் துன்பங்களை நீக்கி சௌபாக்கியத்தை கொடுக்கும்.
அதுமட்டுமின்றி அருகே நவக்கிரக ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது நவக்கிரகங்களின் அருளை மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்தினர் பரிபூரணமாக அருளுவார்.
மேலும் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |