உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் நகம் வரை உள்ளதா? வாழ்க்கையில் இது நடந்தே தீரும்
நமது கைவிரல்களின் வடிவத்தை வைத்து நமது குணாதிசயம் பற்றி ஜோதிடத்தின் மூலம் கூறுகின்றனர். எல்லா விரல்களும் ஒரே போல இருக்காது.
ஒன்றுக்கொன்று வேறுபடும். அதுபோலவே நமக்குள் இருக்கும் குணாதிசயங்களும் வேறுபடும். நமக்கு உடலில் இருக்கும் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு விடயத்தை பிரதிபலிக்கின்றன.
நமது விரல்கள் நமது ஆளுமையையும் காட்டும் ஒரு கண்ணாடி என்பது பலருக்கும் தெரியாத உண்மையே. இந்த பதிவில் நமது விரல் வடிவத்தின் ஆளுமை பற்றி பார்க்கலாம்.
விரல் வடிவம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கிரகத்துடன் தொடர்புள்ளது. இதனால் நமது ஒவ்வொரு செயல்பாடுகள் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
நம் கையின் சுண்டு விரல் புதன் கிரகத்தின் சிறப்பாகும். சுண்டு விரலின் நீளம் மிகவும் குறைவாக இருபவர்களுக்கு பொறுமை என்பது இருக்காது.
நீளமாக இருந்தால் இரக்கம், கருணை போன்ற குணங்கள் குறைவாக இருக்கும். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சீரற்ற வடிவமாக இருந்தால் அவர்களை ஒருபோதும் நம்ப கூடாது. எல்லா வடயத்திலும் கூட இருப்பவர்களை ஏமாற்றுவார்கள். இந்த சுண்டு விரல் மோதிர விரலின் நகம் வரை நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் தெளிவான இலட்சியம் உடையவர்களாய் இருப்பார்கள்.
இதனால் மருத்துவராக வர வாய்ப்பு உள்ளது. ஒரு கால கட்டத்தில் வாழ்க்கையில் இவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே வராது. வாழ்க்கையில் நடுத்தரத்தில் இருந்து வளருவார்கள். ஜோதிடத்தின் படி சுண்டுவிரல் பற்றி இப்படியான விடயங்கள் கணிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |