உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது? ஈஸியா கண்டுபிடிக்க இதை செய்தால் போதும்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு நபர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?
இன்றைய காலத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது அளவுக்கு அதிகமாக சிம் கார்டு வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. நாளுக்கு நாள் இந்த சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
ஓடிபி மோசடி, எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் மோசடி என இந்த மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில் போலி சிம் கார்டு மூலம் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காவல்துறையினர் ஒரு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட 658 சிம் கார்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
2023ம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. இந்த 9 சிம் கார்டுக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமாம்.
எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிய தொலைத்தொடர்பு துறை ஒரு இணையதளத்தை பராமரித்து வருகிறது.
அதன்படி tafcop.dgtelecom.gov.in (Sanchar Sathi) ஐப் பார்வையிடுவதன் மூலம் ஒரு பயனர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியலாம், மேலும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களையும் தடை செய்யலாம்.
முதலில் www.sancharsathi.gov.in என்ற இணையத்தில் சென்று, know your mobile connections என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
பின்பு புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும் நிலையில், இதில் உங்களது மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். பின்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள கேப்சா குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.
உங்களது மொபைல் எண்ணிற்கு வந்துள்ள OTP-ஐ உள்ளிட்ட பின்பு மீண்டும் புதிய பக்கம் ஒன்று திறக்கும். உங்கள் ஆதார் அட்டையுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்கள் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |