எனக்கு பொண்ணு பாருங்கய்யா: கடுப்பாகி எம்.எல்.ஏவிற்கு போன் போட்ட இளைஞன்!
பொதுவாகவே 90ஸ் இளைஞர்களுக்கு திருமணம் ஆகாது என்று கடுப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமாக யோசித்து எனக்கு திருமணத்திற்கு பொண்ணு கொடுங்கனு எம்.எல்.ஏ போன் போட்ட இளைஞன் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பெண் வேண்டும்
மகாராஷ்டிரா, ஔரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத் பகுதியில் உள்ள இளைஞன் ஒருவன் அப்பகுதியில் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து தனக்கு பெண் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னிடம் 8 ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் எனக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அதனால் நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பெண்ணை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ இளைஞனுடைய சுயவிபரக்கோவையை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ அக்கிராமத்தில் சுமார் 100-150 திருமணமாகாத இளைஞர்களை உள்ளனர்.
அவர்களுக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தாலும், திருமணத்திற்குப் பெண் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மாத்திரமல்ல சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.