சந்திரமுகி படத்தில் வரும் அரண்மனையை நினைவிருக்கா? சுவாரஸ்யமான ஒரு பார்வை
ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா உள்ளிட்ட பல திறமை வாய்ந்த நடிகர்கள் நடித்த சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் வரும் அரண்மனையை பற்றி ஒரு தகவலை இங்கு பார்க்கலாம்.
சந்திரமுகி அரண்மனை
பி வாசு இயக்கத்தில் வெளியான படம் தான் சந்திரமகி. இது ரஜினிகாந்த் நயன்தாரா என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் வரும் வேட்டையன் ராஜா அரண்மனை தற்போத வரை அனைவவருக்கும் நினைவிருக்கும்.
இந்த அரண்மனை ர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ளது. இது 1878-ல் மன்னர் சாமராஜேந்திர வாடியாரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் அரண்மனையின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது.
அக்காலத்தில் இந்த அரண்மனையை கட்ட மொத்தமாக 40,000 ரூபாய் செலவு செய்யப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. பல தடைகள் தாண்டி 2005 ஆம் ஆண்டு முதல் இந்த அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இந்த அரண்மனையில் 35 அறைகள் இருக்கின்றன. இங்கு தர்பார் ஹால் இந்த அரண்மனையின் பிரதான இடமாக உள்ளது. இந்த அரண்மனையை பார்வையிட இந்தியர்களுக்கு ரூ.230 மற்றும் வெளிநாட்டவருக்கு ரூ.460 நுழைவு கட்டணமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் மொபைல் கேமராவுக்கு ரூ.285, ஸ்டில் கேமராவுக்கு ரூ.685, டியோ கேமராவுக்கு ரூ.1,485 அனுமதி கட்டணமாக உள்ளது.காலை 10:00 மணி முதல் மாலை 5.30 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |