தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு... உறுதி செய்த நீதிமன்றம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், குழந்தைகள் விடயத்திலும், பொது நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தி வந்தனர்.
ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதே போன்று தனுஷும் தனது பயணத்தை தொடர்ந்துள்ள நிலையில், பல படங்களில் நடித்தும் வருகின்றார்.
தனுஷ் எங்கு சென்றாலும் தனது மகன்களை அழைத்துச் செல்வதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
உறுதியான விவாகரத்து
அதாவது 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி தனுஷ் விண்ணப்பத்திருந்தார். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்று நீதிமன்ற நீதிபதி சுபாதேவி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டார்.
அதோடு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |