ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழம்... அசத்தல் நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்திப்பழம். இது சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மட்டுமல்லாமல் அத்திக்காய், அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அதிக அளவு நார்ச்சத்து, ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதனை தினசரி சாப்பிடுவதனால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அத்திப்பழத்தின் பயன்கள்
அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. பித்தத்தினை சரி செய்ய அத்திப்பழம் பெரிதும் பயன்படுகிறது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
தினமும் இரண்டு அத்திப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்சினை ஏற்படாமல் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரத்தம் அதிகரிப்பதற்கு உதவி செய்கின்றது.
நார்ச்சத்து அதிகமாக இருக்கும் அத்திப்பழம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் காய்ந்த அத்திப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் அவற்றை மிகச் சிறிதளவே உட்கொள்ள வேண்டும்.
இதய ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் தன்னை அத்திப்பழத்திற்கு உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் அதிகம் குறைக்கின்றது. ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை தடுப்பதுடன், இதய சம்பந்தமான கோளாறுகளை வராமல் தடுக்கின்றது.
அத்திப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை காணப்படுவதால், எலும்புகளில் ஆரோக்கியத்தினை அதிகப்படுத்துவதுடன் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் நோய் ஏற்படும் வாய்ப்பினையும் குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |