குண்டா இருக்கிங்களா? எழுந்ததும் 2 அத்திப்பழம் சாப்பிடுங்க கொழுப்பு கரையும்...சுகர் நோயாளி சாப்பிடலாமா?
கொழுப்பு இல்லாத, அதேசமயம் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று அத்திப் பழம்.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. ஆனால் இதில் இனிப்பு அதிகம்.
சர்க்கரை சத்து அதிகமுள்ளதால் நீரழிவு பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாக அத்திப் பழத்தை சாப்பிடக் கூடாது.
எடையை குறைக்கும் அத்திப்பழம்
அத்திப் பழம் தினமும் எடுத்துக் கொள்ளும்போது கணிசமான அளவில் உடல் எடையைக் குறைக்க முடியும்.
உணவு இடைவெளிகளுக்கு இடையில் சிற்றுண்டி நேரங்களில் ஃபிரஷ்ஷான அல்லது உலர்ந்த நிலையில் உள்ள அத்திப் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வோடு இருப்பதோடு, தேவையில்லாமல் நொறுக்குத் தீனிகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க முடியும். இதனால் தேவையற்ற கலோரிகள் உடலில் சேராமல் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
அத்திப்பழத்தினை ஜூஸ் செய்தும் அடிக்கடி குடிக்கலாம்.
அத்திப்பழ ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
- 6 புதிய அத்திபழம்
- தண்ணீர்
செய்முறை
பழங்களின் தண்டுகளை நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும்.
சிறிய அளவில் அவற்றை நறுக்கி, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதிலிருந்து ஜூஸ் தயாரிக்க பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஆரோக்கிய அத்திப் பழ ஜூஸ் ரெடி.
உலர்ந்த அத்திப்பழங்களிலிருந்து அத்தி ஜூஸ் செய்ய, சுமார் 30 நிமிடங்கள், 5-6 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து ஜூஸ் செய்யலாம் .