நீரில் ஊறவைத்த அத்திப்பழம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயம்
முந்தைய காலத்திலிருந்து அத்திப்பழம் ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாக உள்ளது. கரும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை, நம்முடைய பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், அத்திப்பழங்கள் இனிப்புச் சுவைக்காக பயன்படுத்தப்பட்டன.
தற்போது அதிகளவில் ரீபைண்டு சக்கரை பழக்கம் அதிகரித்து, பல்வேறு நோய் பாதிப்பு உருவானது. இதையடுத்து உடல் ஆரோக்கியத்தை பேணும் பொருட்டு, பலரும் தங்களுடைய உணவுப் பழக்கத்தில் அத்திப் பழத்தை சேர்த்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் எப்படிப்பட்ட உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு அத்திப்பழம் தீர்வாக அமைகிறது எனவும், அதை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரவில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்
அத்திப்பழங்கள் உண்பதற்கு மென்மையாகவும் மெல்லும் தன்மையுடனும் இருக்கும். இதில் கொலஸ்ட்ரால், கொழுப்பு இல்லை. அதனால் கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர் இதை தாராளமாகக் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் சோடியம் கொண்ட அத்திப்பழத்தை இரவில் ஊறவைத்து சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
எப்படி ஊறவைத்து சாப்பிடுவது?
உலர்ந்த அத்திப்பழங்களை எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, வெறும் தண்ணீரில் ஊறவைக்கும். ஒரு இரவு முழுவதும் ஊறிய பின், காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிக்கட்டி விடுங்கள்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊறிய உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். முடிந்தால் ஊறிய தண்ணீருடன் உலர்ந்த அத்திப்பழங்களை மிக்ஸி ஜாரின் போட்டு, அரைத்து சாறாக குடிக்கலாம். இனிப்புச் சுவைக்கு தேன் ஊற்றியும் பருகலாம்.
மலச்சிக்கலை தடுக்கும்
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. மேலும் இது குடலின் இயக்கத்தை மேம்படுத்தும், செரிமான அமைப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
சீரான, அதே சமயத்தில் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அவ்வப்போது சாப்பிடுவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன்மூலம் கிடைக்கும் சத்துக்கள் நமது உடலை விட்டு எப்போதும் செல்லாது.
எலும்புகளுக்கு வலுசேர்க்கும்
அத்திப்பழத்தில் கால்ஷியம் நிறைந்து காணப்படுகிறது. இதை அவ்வப்போது உட்கொள்வதால் எலும்புகள் வலுபெறும். உடலில் கால்ஷியம் தானாக உருவாவது கிடையாது.
நாம் தான் உரிய உணவுகளை எடுத்துக்கொண்டு, உடலுக்குள் கால்ஷியத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அத்திப்பழத்துடன், சோயா பால் மற்றும் கீரைகள் மூலமாகவும் நமக்கு கால்ஷியம் பூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைக்க உதவும்
அத்திப்பழத்தில் கலோரிக்கள் குறைந்து காணப்படுகிறது. அதேசமயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க பத்தியம் இருப்பவர்களுக்கு இந்த பழம் சிறந்த தேர்வாகும்.
காலையில் ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது மட்டுமின்றி, உங்களுக்கு பசிக்கையிலும் அவ்வப்போது சாப்பிடலாம். இனிப்புச் சுவை மீது அவ்வப்போது ஏற்படும் ஆர்வத்தை அத்திப்பழம் சாப்பிட்டு கட்டுப்படுத்தலாம்.
இந்த பழம் என்றில்லை, உலர்ந்த பழங்கள் எப்போதுமே உடல் எடையை குறைக்க உறுதுணையாகவே இருக்கின்றன.