Fenugreek Seed: நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு தரும் வெந்தயம்! வெறும் வயிற்றில் சாப்பிடுங்க
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தின் நன்மைகளின் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெந்தயம்
நமது வீட்டு சமையலறையில் இடம்பெறும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எந்த குழம்பு வகைகளாக இருந்தாலும் அதில் வெந்தயத்தின் பங்கு இருந்தே தீரும்.
பெரும்பாலான நபர்களுக்கு இதை சமையலுக்கு ஏன் சேர்க்கின்றோம் என்ற தெரியாமலேயே இதனை பயன்படுத்தி வருகின்றார். ஆனால் பாட்டி காலத்தில் வெந்தயத்தினை உடல் குளிர்ச்சிக்காக நாம் அவ்வப்போது எடுத்துக் கொண்டிருந்தோம்.
AJAYKAMPANI//GETTY IMAGES
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல், டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது.
வெந்தயம் உடல் குளிர்ச்சியையும் தாண்டி வேறு எதற்கெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
Image Credit: kostrez / Shutterstock
மாதவிடாய்
மாதவிடாய் காலங்களில் பெண்களின் வயிறு வலியையும், உடல் உஷ்ணத்தையும் குறைப்பதற்கு வெந்தயம் அதிகமாக பயன்படுகின்றது. அதிலும் முளைகட்டிய வெந்தயத்தினை சாப்பிட்டால் இன்னும் அதிக நன்மை கிடைக்குமாம். அவ்வாறு சாப்பிட முடியவில்லை என்றால் வறுத்த வெந்தயத்தை சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
செரிமானம்
செரிமான பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் வெந்தயத்தையோ அல்லது முளைக்கட்டிய வெந்தயத்தையோ எடுத்துக் கொள்ளலாம். இது ஜீரணக்கோளாறு மற்றும் வாயு தொல்லையும் நீக்கும்.
தலை முடி வளர்ச்சி
பெண்கள் அதிகமாக விரும்பும் கூந்தல் வளர்ச்சிக்கு வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் உள்ள எண்ணெய் பசை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகின்றது. நாம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட்டு பயன்படுத்தலாம்.
சிறுநீர் பிரச்னை
சிறுநீர் சம்பந்தமாக பிரச்சனை உள்ளவர்கள் உணவில் வெந்தயத்தை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் வறட்சியை நீக்கி சிறுநீரைப் பெருக்குவது மட்டுமின்றி சிறுநீரக நோய்கள் வராமலும் தடுக்கின்றது.
ELENA KABENKINA//GETTY IMAGES
ரத்தத்தில் சர்க்கரை அளவு
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. சீரற்ற உணவுப்பழக்கம் காரணமாக ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் சர்க்கரை அளவை சீராக்க காரணமாகும்.
தோல் நோய்கள்
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு வெந்தயம் மிகச்சறந்த நிவாரணம் அளிப்பதுடன், இதனை அரைத்து தோல் பாதிப்புள்ள இடத்தில் தடவி வந்தால், தோல் நோய்கள் முற்றிலுமாக நீங்குவதுடன், அரிப்புகள், தடிப்புகளும் குணமாகின்றது.
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் வெந்தயம் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரில் ஊற வைத்து இரண்டு டம்ளர் அளவிற்கு குடித்தால் உடல் எடை படிப்படியாக குறைகின்றது. ஆனால் அதிகளவு எடுததுக்கொள்வதை தவிர்க்கவும்.
சுவாச கோளாறு
சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாகச் சுவாச கோளாறினால் அவதிப்படுபவர்கள், வெந்நீரில் வெந்தயத்தை போட்டு தினமும் குடிக்கவும். வெந்தயமானது பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, சுவாசப் பிரச்னையிலிருந்து விடுதலை அளிக்கின்றது.
ஆரோக்கியமான இதயம்
இதய நோய் வராமல் இருக்க வேண்டுமெனில் வெந்தயத்தை கட்டாயம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை விதையாகவே, கீரையாகவோ எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தினை சீராக வைக்கக்கூடிய இயல்பு கொண்டுள்ளதுடன், இதயம் சீராக இயங்கி இதயநோய் ஏற்படாமலும் தடுக்கின்றது.
yodiyim/iStock, Getty Images
எலும்புக்கு பலம்
நம் உடம்பில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வெந்தயம் அதிகம் உதவுகின்றது. அதாவது எலும்பின் உறுதித்தன்மை, நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படும். ஆனால் வெந்தயத்தில் உள்ள நச்சு நீக்கும் தன்மை குறித்த நச்சுப்பொருட்களை சிதைத்து வெளியேற்றி உடலுக்கு வலு சேர்க்கின்றது.
Image courtesy: Adobe Stock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |