வெந்தயத்தை ஹேர் ஃபெக்காக பயன்படுத்தலாமா? பயன் என்ன?
வெந்தய விதைகளின் நன்மைகள் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம்.
வெந்தய ஹேர் ஃபெக்
வெந்தயம் சமையலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. இதை வைத்து பலர் முடி பராமரிப்பு செய்கின்றனர். இது இயற்கை வைத்தியங்களில் ஒன்றாகும்.
வெந்தய விதையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை புரதம், நிகோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, இது வேர்களிலிருந்து முடியை வளர்க்கிறது.
கூடுதலாக இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் உள்ளதால் முடி உதிர்தல் மற்றும் முடி நரைப்பதைத் தடுக்க உதவும். இதன் விதைகளில் ஒரு விதமான லெசிதீன் உள்ளதால் தலைமுடிக்கு இது ஈரப்பதத்தை அளிக்கும்.
இது பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பொடுகைப் போக்க வெந்தயப் பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவலாம். வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை நன்றாக பேஸ்டாக அரைத்து உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவலாம்.
30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இதை தவிர தினமம் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து தடவலாம். இப்படி செய்தால் தலைமுடியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |