வெந்தயத்தில் இப்படி குழம்பு வைத்து சாப்பிடுங்க! ஒரு பருக்கை சோறு மிஞ்சாது
பொதுவாக வீடுகளில் அசைவ பிரியர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
ஆனால் சிலர் தங்களின் ஆரோக்கியம் குறித்து சைவ உணவுகளை சாப்பிடுவார்கள்.
இதன்படி, சாம்பார், கார குழம்பு, குர்மா ஆகிய உணவுகளை செய்து சாப்பிடுவார்கள். அதிலும் சிலர் காரமாக குழம்பு இருந்தால் சொல்லவே தேவையில்லை வழமைக்கு அதிகமாகவே சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம்- 3 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மிளகு- 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்-25
தக்காளி-2
பச்சை மிளகாய்-2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-6 தேக்கரண்டி
உளுத்தப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை-2 கைப்பிடி
வெல்லம்- சிறிய துண்டு
தயாரிப்பு முறை
முதலில் கடாயை வைத்து வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அதே கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், உளுத்தப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
அத்துடன், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையானளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இது ஒரு புறம் இருக்கையில், தேங்காய் மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும்.கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வெந்தய குழம்பு ரெடி.!