வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்.. எப்படி?
வழக்கமாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து நாள்ப்பட்ட நோய்களுக்கு நிரந்த தீர்வுக் கொடுக்கலாம்.
அதிலும் குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடல் அளவில் நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பார்கள்.
அதனை சரிச் செய்யும் ஆற்றல் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களுக்கு உள்ளது.
கோடைகாலத்தில் வரும் உடல் சூட்டு பிரச்சனைகளான நீர்க்கடுப்பு, வயிற்று வலி, சரும நோய்கள் உள்ளிட்டவைகளுக்கு வெந்தயத்தில் தீர்வு உள்ளது.
அந்த வகையில் வெந்தயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
வெந்தயம் குடிக்கும் பழக்கம் உள்ளதா?
1. கோடைக்காலத்தில் உடல் வெப்பம் தணிவதற்காக வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் போட்டு கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
2. வெந்தயத்தில் உள்ள நாரின்ஜெனின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் எடை அதிகரிப்பு பிரச்சினையும் கட்டுக்குள் இருக்கும். டயட் பிளானில் இருப்பவர்கள் வெந்தய நீர் குடிக்கலாம்.
3. வெந்தயத்தில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் உள்ளன. இது செரிமானத்தை சீர்ப்படுத்தி, சரும அழகை மேம்படுத்தும்.
4. வெந்தயம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் தீரும். அத்துடன் வாய்வு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.
5. நீரிழிவு நோயாளிகள் நாள்தோறும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனவே மருந்துவில்லைகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வெந்தய நீர் குடிக்கலாம்.
6. பாலியல் பிரச்சினைகளை சந்திக்கும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் மருந்துவில்லைகளுடன் வெந்தய நீர் குடிக்கலாம். ஏனெனின் வெந்தயம் உடலில் உள்ளடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். இதனால் உங்களின் ஆண்மையும் மேம்பட வாய்ப்பு உள்ளது.
7. வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் உள்ள வீக்கம், அழற்சியைக் குறைக்கும். இதனால் நாள்பட்ட அழற்சியால் அவஸ்தை அனுபவிப்பவர்கள் வெந்தய நீர் குடிக்கலாம்.
8. நாள்தோறும் வெந்தயம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு மூட்டுவலி சார்ந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
9. உடல் உஷ்ணம், செரிமானம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வெந்தயத்தை தினமும் காலையில் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
