பாபா ரொம்ப நல்லவர்! கடவுள் மாதிரி... மாணவிகளை வசியப்படுத்த 29 வயது பெண் பக்தை
பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, மாரடைப்பு காரணமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது.
இப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர்பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு, சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, டி.எஸ்.பி., குணவர்மன் தலைமையிலான போலீசார், டில்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து, 16ம் தேதி, சென்னை அழைத்து வந்தனர்.
செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்தாக அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், அவரது சீடருமான சுஷ்மிதா, 29, என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர், சிவசங்கர் பாபாவின் பாலியல் தொல்லைகளை சகித்துக் கொள்ள, மாணவியரை மூளைச்சலவை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.