நீரழிவு நோயாளிகள் தினமும் கால்களை பராமரித்து பரிசோதிக்க வேண்டியது அவசியமா?
நீரழிவு நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவது கால்கள் இதிலுள்ள நரம்புகள் நீரழிவு நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அதை தினமும் பராமரிப்பது அவசியம்.
பாதங்கள்
நீரழிவு நோயினால் கால்கள் பாதிக்கப்படும் போது இதில் உணர்வை இழப்பது அல்லது உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வுகளை ஏற்படுத்தும்.
கால்களில் உணவில்லாமல் இருக்கும் போது அதில் ஏதேனும் பாதிப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டால் தெரிவதில்லை இதனால் தொற்றுக்கள் வர வாய்ப்பு உள்ளது.
எனவே, உங்கள் கால்களை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். கால்விரல்களுக்கு இடையில் மற்றும் கால்களுக்கு அடியில் சரிபார்க்க வேண்டும்.
அப்போது ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதை தவிர கால்களில் வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் கொப்புளங்கள், நிறத்தில் ஏதேனும் மாற்றம், உடைப்பு அல்லது தோலில் விரிசல், ஏதேனும் அசாதாரண வீக்கம் மற்றும் வலியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கவனியுங்கள்.
இதற்கு தினமம் கால்களை வெதுவெதுப்பான சுடு நீரில் கழுவி வர வேண்டும். பாதங்களை நன்கு உலர வைக்கவும். இதை தடுக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலணியை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
லேஸ் அல்லது வெல்க்ரோ போன்ற ஃபாஸ்டென்னிங் கொண்ட காலணிகளைத் அணிவது நல்லது. தினமும் புது புது சாக்ஸ்களை போட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |