தும்பாக இருக்கும் நுனி முடியை எப்போது வெட்டனும் தெரியுமா?சந்திர நாட்காட்டியின் சூப்பரான விளக்கம்!
பொதுவாக பழங்கால கூற்றின் படி பெண்களின் தலைமுடி மனிதர்களையும் விண்வெளியையும் இணைக்கும் இணைப்பாக பார்க்கப்படுகின்றது.
இதனால் தான் முடி வெட்டும் விண்வெளியில் மாற்றங்கள் அடிப்படையாக பார்க்கிறார்கள். இவ்வாறு தலைமுடியை நாம் வெட்டும் போது சிலருக்கு நன்றாக வளரும் இன்னும் சிலருக்கு இருந்த முடியும் தும்பாக மாறி விடுகிறது.
அந்தவகையில் முடி வெட்ட சாதகமான நாட்கள் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
சந்திர நாட்காட்டியின் படி சாதகமான நாட்கள்
சந்திரன் நம்முடைய வாழ்க்கையுடன் பல சந்தர்ப்பங்களில் தொடர்புபடுகிறது. இதில் தலைமுடியும் ஒன்று.
சந்திரனுக்கு உகந்த நாட்களில் முடி வெட்டுவதன் மூலம் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுகின்றார்கள் என ஜோதிடம் கூறுகின்றது.
உகந்த நாட்கள்
- புதிய நிலவு
- வளரும் நிலவின் நாட்கள்
பொதுவாக அமாவாசை தினங்களில் சிகை அலங்காரம் செய்து கொண்டால் அடுத்த மாதம் நேர்மறையான விளைவுகளை காணலாம். அதே போல் நிலா வளரும் நாட்களில் வெட்டினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் சந்திரன் மேஷ ராசியில் பயணிக்கும் போது தலைமுடியில் கைக் கூட வைக்கக் கூடாது. உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய், பொடுகு பிரச்சினை ஆகிய தீராத விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.
இதனை தொடர்ந்து சந்திரன் மீன ராசியில் இருக்கும் போது தலையில் கை வைத்தால் அதிகமான தலைமுடி உதிர்வு ஏற்படும்.
சிகை அலங்காரத்தை சந்திரன் கன்னி மற்றம் மகர ராசியில் இருக்கும் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உச்சந்தலை பிரச்சினை நீங்கும்.
சந்திரன் மிதுனம் மற்றம் துலா ராசியில் இருக்கும் போது சிகை அலங்காரம் செய்தால் தலைமுடி வேகமாக வளரும்.
தொடர்ந்து சிம்மத்தில் சந்திரன் இருக்கும் போது சிகை அலங்காரம் செய்தால் உங்களுக்கு சிறந்த விளைவை தரும் நினைத்தால் போல் அலங்காரம் இருக்கும்.
சிகை அலங்காரத்திற்கு உகந்த நாட்கள்
- சாதகமற்ற - ஞாயிறு
- சாதகமானது - திங்கள், வெள்ளி, சனி
- நடுநிலை - செவ்வாய், புதன் அல்லது வியாழன்