60 வயதில் குட்டை உடை தேவை தானா? பிரபலத்தை விளாசும் நெட்டிசன்கள்
செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்தவர் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக மட்டுமின்றி மலையாளம், தமிழ் ஆகிய மொழியில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமில்லாமல் டிவி சீரியல்கள், நாடக நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் அதிமுக கட்சியினரின் செய்தித் தொகுப்பாளராக இருந்தார்.
அதன்பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர், பன்னீர் செல்வம் அவர்களின் அணியில் இணைந்து கொண்டார்.
அதன்பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பொஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் அதில் முதல் போட்டியாளராக வெளியேற்றவும் பட்டார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் பாத்திமா ஒரு குட்டையான உடை அணிந்து, புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இவர் ஃபிட்டாக இருப்பதற்காக உடற்பயிற்சி, யோகா மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் யோகா தினத்தின்போது சில யோகா போஸ்களை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.