விவாகரத்து செய்தவுடன் நடிகையுடன் மூன்றாவது திருமணமா? அவரே வெளியிட்ட தகவல்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். ஏற்கனவே முதல் திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அமீர் கான் அவரின் மகளாக தங்கல் படத்தில் இணைந்து நடித்தவரை 3-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து இருவரும் எந்தவித விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது பாத்திமா சனா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இதுபோன்ற வதந்திகள் வருவது நாளுக்கு நாள் வழக்கமாகிவிட்டது. இதனை கண்டு கொள்ளாமல் இருந்தால் அதுவே அடங்கிவிடும் எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.