மகளை தம்பியிடம் நம்பி விட்டுச் சென்ற தந்தை: வயிற்றில் சித்தப்பாவின் 7 மாத சிசு! 13 வயது சிறுமி தற்கொலை
தாய் இல்லாத மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று நம்பி மகளை தனது தம்பியிடம் விட்டுச்சென்ற தந்தைக்கு பாரிய சோகம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி. 10 வருடத்திற்கு முன்பு தாய் இறந்த நிலையில், தந்தையும், தாத்தா மற்றும் பாட்டியிடம் சிறுமி வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்காக கோவைக்கு சென்ற தந்தை, தனது மகளை அம்மா, அப்பா மற்றும் தனது தம்பி செந்திலிடமும் கூறிவிட்டு சிறுமியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தகவலறிந்த பொலிசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், பரிசோதனை முடிவு வந்ததும் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம் உடற்கூறு ஆய்வின்போது சிறுமியின் வயிற்றில் ஏழு மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து சிசுவை டிஎன்ஏ ஆய்வுக்காக மருத்துவக்குழுவினர் அனுப்பியுள்ளனர்.
சிறுமிக்கு வன்கொடுமை தொந்தரவு கொடுத்தது யார் என்று விசாரித்த போது, அவரது சித்தப்பா என்று தெரியவந்ததையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாள் கழித்து சிறுமியின் சித்தப்பா தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்ததும், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அண்ணன் மகள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்ததால், குற்ற உணர்ச்சியில் சித்தப்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.