மணமகனை காலணியால் தாக்கிய மாமனார்: காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
திருமணம் முடிந்தப் பிறகு மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் மாமனார் மணமகனுக்கு காலணியால் அடிக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
மாமனாரிடம் அடிவாங்கிய மணமகன்
திருமணம் என்றாலே மகிழ்ச்சி, சண்டை, குதூகலம் எல்லாம் சேர்ந்து ஒரு பண்டிகை போல கொண்டாடுவது வழக்கம். இப்படியெல்லாம் இருந்தால் தான் அது திருமணம்.
அப்படி திருமணம் முடிந்து எல்லோரும் கிளம்பும் வேளையில் மாமனார் மருமகனை வெளுத்து வாங்கியிருக்கிறார். ஏனென்றுக் கேட்டால் திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் வீடு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மணமகன் தான் தாலிகட்டிய பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.
இதனால் பெண்ணை எப்படியாவது அழைத்துச் செல்லுங்கள் என உறவினர்கள் எல்லோரும் சமாதானப்படுத்தியுள்ளனர் ஆனால் மணமகன் எதனையும் ஏற்றுக் கொள்வதாயில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை தான் காலில் அணிந்த காலணியை கழட்டி மணமகனை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதனை எதிர்ப்பார்க்காத மணமகன் வலி தாங்க முடியாமல் மாமானாரிடம் கெஞ்சியிருக்கிறார்.
அதற்குப்பிறகு மாப்பிள்ளையின் வரதட்சணை பேயை மாமனார் விரட்டியிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.