நள்ளிரவில் கணவர் இல்லாத நேரத்தில் நுழைந்த மாமனார்! துடிக்க துடிக்க அரங்கேறிய கொடூரம்
நெல்லை மாவட்டத்தில் கணவர் இல்லாத நேரத்தில் மாமனார் மருமகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது திருமணத்திற்கு ஆசைப்பட்ட மாமனார்
நெல்லை மாவட்டம் இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தங்கராஜின் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் தனது மகன் பெயரில் எழுதிவைத்த வீட்டை திருப்பி தனது பெயருக்கு மாற்றித் தர கேட்டுள்ளார்.
இதற்கு தமிழரசன் மற்றும் அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ் மகன் வெளியே சென்ற தருணத்தில் மருமகளை இரும்பு கம்பியால் அடித்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் முத்துமாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மாமனாரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.