மகளின் திருமணத்தில் எமோஷனலான தந்தை: கண்ணீர் மல்க வைக்கும் காட்சி!
ஒரு திருமண நிகழ்வின் போது மகளை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் நிகழ்வில் தந்தை ஐயர் சொல்லும் மந்திரத்தை கூட சொல்ல முடியாத அளவுக்கு எமோஷனலான தருணத்தை காட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதனம். திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் அவரது பெண்ணை மற்றொரு குடும்பத்தில் அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்னிகாதானம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

திருமணத்தில் கன்னிகாதானம் செய்யும் போது ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க, தந்தையார் மணமகனின் கரங்களில் ஒப்படைப்பர்.
அப்போது மணமகன், பெண்ணை தானம் எடுப்பார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் தந்தை தன் மகளை பிரிய மனம் இல்லாமல், ஐயர் சொல்லும் மந்திரத்தை கூட சொல்ல முடியாத அளவுக்கு எமோஷனலான காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |