பரீட்சை நேரத்தில் நினைவாற்றலை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை தவிர்க்காதிங்க!
பொதுவாகவே உடலின் ஏனைய செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது நமது மூளை தான். மனிதனின் மூளை சரியாக இயங்கினால் தான் அவன் சரியான நிலையில் இருக்க முடியும்.
கல்விகற்கும் போதும் சரி வேலைக்கு சென்ற பின்னரும் சரி நினைவாற்றல் என்பது இன்றியடையாத ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.

சிலருக்கு அதிகமாக மறதி காணப்படும். மிகவும் சிரமப்பட்டு படிக்க கூடியவர்களும் கூட இந்த நினைவாற்றல் குறைப்பாடு காரணமாக பரீட்சையில் போதிய புள்ளிகளை பெற முடியாத நிலை இருக்கும்.
அப்படி நினைவாற்றல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களும் சரி, அலுவலக பணியாளர்களும் சரி தங்களின் நினைவாற்றலை அதிகரிக்க ஆயுர்வேதத்தின் பிரகாரம் தினசரி உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருட்கள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அவசியம் சாப்பிட வேண்டியவை

பாதாம் : 5-7 பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, தோலை நீக்கிய பின் காலையில் சாப்பிடுட்டு வருவது, மூளை செயல்பாடுகளை மேம்படுத்துவாதில் ஆற்றல் காட்டுவதாக ஆயுள்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நெல்லிக்காய் : வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நினைவாற்றலை அதிகரிக்கவும் துணைப்புரிகின்றது. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதுடன், கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

பிராமி: அறிவாற்றல் செயல்பாட்டிற்காக ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட மூலிகையான பிராமியை ஒரு துணைப் பொருளாகவோ அல்லது பொடியாகவோ காலையில் வெதுவெதுப்பான நீர் அல்லது நெய்யுடன் கலந்து எடுத்துக்கொள்வது நினைவாற்றலை அதிகரிப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

நெய்: மூளை உட்பட திசுக்களை ஊட்டமளிப்பதிலும் ஆற்றல் காட்டும் நெய்யை உங்கள் தினசரி உணவில் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்வதால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மூளையின் செயற்பாட்டை சீராக பராமரிப்பதிலும் சிறப்பாக செயலாற்றுகின்றது.

மஞ்சள்: ஆயுர்வேதத்தின் அடிப்படையில் குர்குமின் நிறைந்த மஞ்சள் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதாக அறியப்படுகிறது. இதை கறிகளில் சேர்க்த்து சமைத்து சாப்பிடுவதாலும், பாலில் கலந்து குடிப்பதாலும் மூளை ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன் நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.

புளுபெர்ரி : ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள் மூளை செல்களைப் பாதுகாக்க உதவும். அந்தவகையில், புளுபெர்ரியை ஸ்மூத்திகளில் சேர்த்து அல்லது தயிர் அல்லது தானியங்களுக்கு ஒரு டாப்பிங்காக சேர்க்கலாம். அதனால் நினைவாற்றல் மேம்படுகின்றது. குறித்த உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளையின் ஆரோக்கியத்தை சீராக பாதுகாக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |