முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.
இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இல்லாமல் செய்ய முடியும்.
ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. அந்த வகையில் பலரும் பயன்பெற்ற முடிவளர்ச்சி பொருளை பதிவில் கூறுகிறொம். அத தான் ஆலிவ் காய் இதை வைத்து எப்படி முடி வளர்ச்சியை தூண்ட முடியும் என்பதை பார்க்கலாம்.
முடி வளாச்சியை தூண்டும் ஆலிவ் காய்
ஆலிவ் எண்ணெய் - ஆலிவ் எண்ணெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் முடியின் வேர்களில் ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்வதற்கு தணை புரிகிறது.
இதனால் முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியான முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை லேசாக சூடாக்கி, அதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை உங்கள் வேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் ஓள்வு நேரத்தில் செய்யலாம்.
இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெய்யை கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தடவி, தலையை ஒரு கவர் கொண்டு மூடி காலையில் எழுந்ததும் சாதாரண நீரில் குளித்து விட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெய் முட்டை - முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய்யுடன் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஹேர்பேக்கை உங்கள் கூந்தலில் தடவவும். இதில் அதிகமாக புரதச்சத்து நிறைந்துள்ளது.
இந்த ஹேர் பெக்கை தலையில் சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிட்டு பின்னர் குளித்து விடலாம். முட்டையில் உள்ள புரதம் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதனால் பட்டுப்போன்ற பளபளப்பான தலைமடி வளரும்.
ஆலிவ் எண்ணெய் கற்றாழை - ஆலிவ் எண்ணெய்யுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கலந்து உச்சந்தலையில் தடவலாம். இந்தக் கலவை உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதேபோல், ஷாம்பூ பயன்படுத்துவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆலிவ் எண்ணெய்யை உச்சந்தலையில் நன்கு தேய்க்கவும். இது முடி உதிர்வை குறைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |