உங்க உடலை சிக்கென ஸ்லிம்மாக காட்டணும் ஆசையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் தன்னை சிலிம்மாக காட்டிப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
ஆனால் நாம் விடும் சிறு தவறுகள் கூட நினைப்பதற்கு அப்படியே மாற்றாக காட்டி விடும்.
அவ்வளவு பேஷன் குயினாக இருக்க நினைப்பவர்கள் ஒரு சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டார்கள். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் நாயகி நீங்கள் தான்.
அந்த வகையில், சிக்கென ஸ்லிம்மாக காட்ட நினைப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

சிலிம்மாக காட்டும் பேஷன் டிப்ஸ்
1. செங்குத்துக் கோடுகள் கொண்ட ஆடைகள் ஆண்கள் அணியும் பொழுது அவர்கள் சிலிம்மாகவும், பார்ப்பதற்கு உயரமாகவும் தெரிவார்கள். இந்த டிசைனில் சட்டை, குர்தா, பேண்ட் என எந்த வகை ஆடைகளையும் தெரிவு செய்யலாம். அதிலும் குறிப்பாக உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் Horizontal stripes வடிவங்களை தவிர்ப்பது நல்லது.
2. ஒரே நிறத்தில் ஆடை அணிவது உங்களை ஒல்லியாகவும், வித்தியாசமான தோற்றத்திலும் காட்டும். எந்த ஆடையை தெரிவு செய்வது என தெரியவில்லை என்றால் இது போன்ற ஆடைகளை தெரிவு செய்யலாம்.

உதாரணமாக, கருப்பு, அடர் நீலம், அடர் பச்சை போன்ற அடர் நிறங்கள் ஒல்லியாக காட்டும். அதிலும் குறிப்பாக கருப்பு நிற பட்டு சட்டைக்கு கருப்பு நிற காட்டன் பேண்ட் அணியலாம். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான தோற்றத்தை தரும்.
3. வழக்கமாக நாம் விடும் தவறுகளில் இதுவும் ஒன்று கழுத்து மற்றும் மார்புப் பகுதியை ஆடையில் சரியாக தெரிவு செய்ய வேண்டும். கலமான தோள்பட்டை கொண்டவர்கள் ரவுண்ட் நெக் அல்லது போட் நெக் போன்ற மூடிய நெக்லைன்களை தவிர்க்க வேண்டும். ஏனெனின் இது அவர்களை இன்னும் அகலமானவர்களாக காட்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |