நிஜ வாழ்க்கையில் மோசமான குணம் கொண்டவரா வில்லி வெண்பா? திட்டித்தீர்த்த ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் வெண்பா வெளியிட்ட கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் நடிகை பரீனா. குறித்த கதாபாத்திரத்தினால் சின்னத்திரை நீலம்பரியாகவே மாறியதுடன், ரசிகர்களையும் வாயடைக்க வைக்கின்றார்.
சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த இவர், குழந்தை பெற்றெடுத்து இரண்டு மாதத்தில் மீண்டும் குறித்த சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஒன்றில் இவர் வெளியிட்ட காணொளிக்கு ரசிகர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார். ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் குழந்தையோடு நேரத்தை செலவிடுங்கள் என்று கூறியதற்கு, அது எனக்கு தெரியும் என் பையன் என் கூட தான் இருக்கிறார் என்று பதிலளித்திருக்கிறார்.
பரீனாவின் இந்த பதிலை அவதானித்த மற்றொரு ரசிகர், இவர் மிகவும் திமிர் பிடித்தவர். இவருடைய பக்கத்தில் எதையும் கமெண்ட் செய்யாதீர்கள். இவரை பிளாக் செய்து விடுங்கள். ரசிகர்கள் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்பதை மறந்து விட்டார். எப்போதும் ரசிகர்களிடம் திமிராக தான் பதில் கூறுகிறார்.
நிஜ வாழ்க்கையில மிகவும் மோசமான குணம் கொண்டவர் என்று விமர்சித்து பதிவிட்டுள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
