கண்ணீர் விட்டு கதறும் வில்லி நடிகை வெண்பா: உண்மையில் நடந்தது என்ன?
தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பயங்கரமான வில்லியாக நடித்துவரும் ஃபரினா தான் சந்திக்கும் சிரமத்தினை கண்ணீருடன் விளக்கியுள்ளார்.
நடிக்க வருவதற்கு சிறிதும் யோசனை இல்லாத இவர் தொகுப்பாளினி வேலை மிகவும் பிடித்ததால் பல சினிமா வாய்ப்புகளை புறக்கணித்துள்ளார்.
ஆனால் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் பிரவீன் சார் என்று கூறியுள்ளார்.
கதை மிகவும் மொக்கையாக இருக்கிறதே என்கிற உணர்வு என்னுள் இருந்துகொண்டே இருந்த நேரத்தில், எனது நடிப்பினை நானே ஸ்கீரீனில் பார்க்கும் போது மிகவும் அழகாக இருந்ததால், மிகவும் வருத்தப்பட்டேன். பல வாய்ப்புக்களை நாம் ஏன் வேண்டாம் என்று கூறினோம் என்று.
ஆனால் வெளியே செல்லும் தனது சக நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டும் ரசிகர்கள் தன்னை பிடிக்காது என்றும் புகைப்படம் எடுக்க மாட்டோம் என்று நேருக்கு நேராக கூறியுள்ளார்களாம்.
அதனால் மனம் உடைந்து அழுதாலும், அவர்கள் திட்டியது வெண்பாவை உன்னை இல்லை என்று இவரது நண்பர்களின் வார்த்தைகள் இவருக்கு ஆறுதலாக இருக்குமாம்.
ஆனால், தனது வீட்டில் அப்படியே ஆப்போசிட். நானே எவ்வளவு கஷ்டப்பட்டு வில்லி பாவனைகளை செய்கிறேன்.
ஆனால், அதையெல்லாம் பார்த்து தனது கணவர் விழுந்து விழுந்து சிரிப்பாராம். அதைவிட இவரது நண்பர்கள் இவரைக் காமெடி பீஸாகவே மாற்றி கலாய்ப்பார்களாம்.