குடிபோதையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் - இழுத்து சென்ற வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் போட்டி 15வது சீசன் முடிவடைந்து குஜராத் அணி கோப்பையை வென்றது. குஜராத் அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் இதில் குஜராத் அணி வீரர்கள் மட்டுமின்றி, மற்ற அணியில் இருந்த வீரர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார்.
தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சஹால் நல்ல போதையில் இருந்தது போன்று தெரிகிறது.

உடனே அங்கு வந்த ரசிகர்கள் அவருடன் செஃல்பி எடுக்க பின ஆஷிஷ் நெஹ்ரா, "காரில் ஏறாதே.. வா பஸ்ஸில் போகலாம்" என சஹாலை அழைத்துள்ளார்.
ஆனால் சாஹல் வர மறுத்துள்ளார். தொடர்ந்து, சாஹலின் மனைவி தனஸ்ரீ காரில் அமர்ந்துவிட்டார். மனைவியை தனியாக அனுப்பிவிட்டு, நான் எப்படி பஸ்ஸில் வருவது எனக் கேட்க, ஆஷிஷ் நெஹ்ரா உடனடியாக காருக்கு சென்று தனஸ்ரீயை கட்டாயப்படுத்தி பஸ்ஸில் செல்ல இழுத்துச் சென்றார்.
மேலும் சிலர் வீடியோ எடுக்க பாதுகாவலர்கள் அதனை வீடியொ எடுக்க கூடாது என தடுத்துக்கொண்டிருந்தனர். இந்த வீடியோ வைரலாக சாஹல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.