லட்சக்கணக்குல செலவு செஞ்சு படிக்க வெச்சா இப்படியா விநோத ஆசைப்படுவீங்க! ஷாக்கான ஹீரோயினின் அதிரடி ரிப்ளை
“பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்தால் உங்களுடைய ஆசை இப்படி விபரீதமான ஆசையாக இருக்கிறதே? என்ன இதெல்லாம்” என்று நடிகை அனைகா சோதி ரசிகர் ஒருவரிடம் தம்முடைய இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்டிருக்கிறார்.
இந்த கேள்வி வைரலாகி வருகிறது.
நடிகை அனைகா சோதி சித்தார்த் நடித்த காவியத்தலைவன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக அறியப்பட்டவர்.
தொடர்ந்து தம்முடைய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருவரும் அனைகா சோதி ரசிகர்களிடம் ஒரு கேள்வி பதில் செஷனை வைத்திருக்கிறார்.

அதில் உங்களுடைய ரகசியங்களையும் ஆசைகளையும் என்னிடம் பகிரலாம் என்று அனைகா சோதி குறிப்பிட பலரும் தங்கள் ஆசைகளை ரகசியங்களை அனைகா சோதியிடம் பகிர தொடங்கியுள்ளனர்.
இதில் பல்வேறு ரசிகர்களும் பலதரப்பட்ட விஷயங்களை அனைகா சோதிடம் பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு ரசிகர் மட்டும், “நான் உங்களைப் போன்ற அழகு பெண்களுக்கு உட்காரும் நாற்காலியாக இருக்க விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த அனைகா சோதி, “உங்களுடைய பெற்றோர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து உங்களை படிக்க வைத்து பிள்ளைகளை டாக்டராக வேண்டும் என்ஜினியராக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.
ஆனால் நீங்களோ எனக்கு ஒரு 200 ரூபாய் சேராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே?” என்று பதிலளித்திருக்கிறார்.
ரசிகரின் இந்த கேள்வியும் அவருக்கு அனைகா சோதி அளித்த இந்த அதிரிபுதிரி பதிலும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.