பிரபல நடிகை பூனம் பாண்டேவுடன் செல்பி எடுக்க வந்து அத்துமீறிய நபர்... இறுதியில் என்ன நடந்தது?
சர்ச்சைக்குரிய மாடலும், பிரபல பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்து அத்துமீறி நடந்துக்கொண்டுள்ள காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பூனம் பாண்டே
அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் தான் பூனம் பாண்டே. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி விளம்பரம் மற்றும் ரியாலிட்டி நிழழ்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
அண்மையில் பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைத்தார்.
பின்னர் இது விழிப்புணர்வுக்கான செயல் என அவரே கூறினார்.குறித்த விடயம் இணையத்தில் பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியது.
அத்துமீறிய நபர்
இந்நிலையில் பூனம் பாண்டேவுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர், போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில் பூனம் பாண்டேவை முத்தமிட முயற்சித்து இருக்கிறார்.
பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டு பதறி ஓடிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |