திருமண கோலத்தில் பிரபல வில்லி நடிகை: குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சீரியல்களில் பிரபல வில்லி நடிகையான சுஷ்மா நாயருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல ஹிட் சீரியலான நாயகியில் வில்லி ரோலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சுஷ்மா நாயர்.
இதன்பின்னர் திருமகள் சீரியலில் நடித்து வந்தார், அதிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகினார், தற்போது இவருக்கு பதிலாக நிவேதிதா நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும், லியோ டி ஜான் என்பவருக்கும் கடந்த 18ம் தேதி தேவாலயத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சுஷ்மா நாயர் வெளியிட, ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.