இத்தனை அழகானதா தமிழகத்தின் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆலயம்!
இந்தியவின் தமிழகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஒரு புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலம் ஆகும் . இது, கிழக்கு கடற்கரைச்சாலையில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கி.மீ. தெலைவில் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேளாங்கண்ணியில் வீற்றிருக்கும் புனித அன்னை மேரி ஆலயம், நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையத்தில் ஒன்றாகும்.
இது “கிழக்கின் லூர்து” என பிரபலமாக அறியப்படுகிறது. அதன் தோற்றங்கள் 16 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியிருக்கலாம் என வரலாறுகள் கூறுகின்றன. வருடந்தோறும், 20 மில்லியன் யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.
இங்கு, ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அன்னையின் திருவருளை பெற வேண்டி நடை பயணமாகவே இவ்வாலயத்தை அடைவது மேலும் சிறப்பு. இந்த ஆலயத்திற்கு கிருஸ்தவர்கள் மாத்திரமன்றி இந்துக்களும் கூட வந்து செல்கின்றனர்.