மனோஜ்- நந்தனா திருமணத்திற்கு இவர் தான் காரணம்.. பிரபலம் உடைத்த உண்மை
மனோஜ்- நந்தனா இருவருக்கும் திருமணம் செய்து வைத்தவர் இளையராஜா தான் என பிரபலம் ஒருவர் பேட்டியொன்றில் ஓபனாக கூறியுள்ளார்.
நடிகர் மனோஜ்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் 26-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.
மனோஜ் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களில் ஒருவர். இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் மக்களை கவராவிட்டாலும், இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் பயணித்தார்.
இவர், இறந்த பின்னர் பல பிரபலங்கள் அவர் செய்த உதவிகள் மற்றும் அவருடைய குணம் பற்றி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், தம்தி ராமையா பேசும் பொழுது,“ மனோஜ் மிகவும் பாவம், அதிகமான அழுத்தம் தான் அவருடைய இறப்பிற்கு காரணம்..” என பேசியிருந்தார்.
திருமணம் எப்படி நடந்தது?
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர் பேசுகையில், “சாதுரியன் படத்தில் தான் நந்தனாவை மனோஜ் முதலில் சந்தித்தார். பார்த்தவுடன் தன்னுடைய காதலையும் சொல்லிவிட்டார். சுமாராக 2 வருடங்கள் இருவரும் காதலித்தனர்.
ஆனால், நந்தனா வீட்டில் இவர்களின் காதலை ஏற்கவில்லை. தன்னுடைய காதல் பற்றி பாரதிராஜாவிடம் சொல்ல பயந்த மனோஜ், இளையராஜாவிடம் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார்.
பிறகு இளையராஜா தான், நந்தனாவின் பெற்றோரிடம் "மனோஜ் நல்ல பையன், திருமணம் செய்து வையுங்கள்" என்று பேசி சம்மதிக்க வைத்துள்ளார். சினிமாவில் தோற்றிருக்கலாம், ஆனால் மனைவி, குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் மனோஜ்" என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |