பிரபல காமெடி நடிகருக்கு மாரடைப்பு... ICU-வில் அனுமதி - காரணம் கேட்ட மக்கள் அதிர்ச்சி
பிரபல காமெடி நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு அவர் தற்போது ICU-வில் அனுமதிக்கபட்டுள்ளார்.

காமெடி நடிகர் பெஞ்சமின்
இந்திய சினிமாக்களை பொறுத்தவரையில் கதைகள், பாடல்கள் கதாநாயகர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நகைச்சுவை நடிகர்களுக்கும் இங்கு உண்டு.
சில சமயங்களில் பல படங்கள் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்காகவே ஓடிய கதைகளும் உள்ளது. அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் பெஞ்சமின் தற்போது மாரடைப்பால் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

மாரடைப்பு வர காரணம்
கடந்த சில நாட்களாக, பெஞ்சமின் சேலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரங்கயளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதிக வெயில் காரணமாகவும், ஓய்வு இல்லாமலும் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதன் பின்னர் வாகன பேரணியில் கலந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சு வலி வந்து மாரடைப்பு ஏற்பட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதன் பின்னர் இவர் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவர்கள் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, பெஞ்சமினுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |