குணப்படுத்த முடியாத நோயால்... பிரபல நடிகர் திடீர் மரணம்
44 வயதான பிரபல நடிகர் குணப்படுத்த முடியாத நோயால் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார்.

4 வயதான பிரபல நடிகர் மூளைக் கட்டி காரணமாக உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில் இளம் வயது சினிமா பிரபலங்களின் தொடர்ச்சியான மரணங்களுக்கிடையில், இந்தச் செய்தியும் ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கன்னட சினிமாவி பிரபல நடிகரான படுகௌடா பத்மநாப கே.எம். திடீரென உயிரிழந்துள்ளார். இவர் கன்னட சீரியல் உலகில் பிரபலமான நபர். சீரியலுக்கு முன்னர் ஒரு மாடலாக இருந்துள்ளார்.

இவர் சீரியல் நடிகர் மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். திருமணமான படுகௌடா தனது மனைவி மகளுடன் பெங்களூரு யெலஹங்காவில் வசித்து வந்துள்ளார். இப்படி சூழல் இருக்க இவருக்கு அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டதாம்.
சிகிச்சை மற்றும் குணமடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு குணப்படுத்த முடியாத மூளைக்கட்டி இருந்ததும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இவர் இன்னு அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |