புதுப்பெண்ணை அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த குடும்பம்: பதறவைக்கும் வீடியோ
இளம்பெண் ஒருவரை மரத்தின் கிளையில் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்துள்ள காட்சி கண்கலங்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த கிராமத்தில் 19 வயது சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், புகுந்த வீட்டில் பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றால் திட்டுவார்கள் என பயந்து உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த பிரச்சினை தெரியவந்ததும், பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அழைத்து வந்து, ஊருக்கு நடுவே உள்ள மரக்கிளையில் தொங்கவிட்டு கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
குறித்த பெண் பயங்கரமாக கதறியும் அவர்கள் அடித்துக்கொண்டே இருக்க, சுற்றி நின்று ஊரார் வேடிக்கை பார்த்ததுடன், காணொளியாக எடுத்துள்ளனர்.
காணொளியினை அவதானித்த, பலரும் அதிர்ச்சியடைந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் புதுப்பெண் மருத்துவமனையில் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்துள்ளார்.
Whether there is any thing called law in MP or not, every day the girl is ashamed of immoral incidents, in MP district Alirajpur, the girl is being brutally beaten up by hanging on a tree, there is no fear of law among the influential@sp_alirajpur @DGP_MP pic.twitter.com/Qpufam7fkw
— कोमल कर्णवाल ?? (@KaranwalKomal) July 2, 2021