சாமியாரின் லீலை.... அலறி துடித்த மகள்! ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தால் கப்பலேறிய மானம்
இளம் குடும்ப பெண்களை ஏமாற்றி பணம் பரித்த போலி சாமியார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன்.
இவர் மனைவிதான் லட்சுமிக்கு 35 வயதாகிறது. இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

லட்சுமி வீட்டின் மாடியில் வாடகைக்கு 2020ம் ஆண்டு சத்தியவதி என்ற 36 வயது பெண், இரண்டு மகள்களுடன் குடிவந்துள்ளார். அனைவருடன் நட்பாக பழகியுள்ளார்.
வீட்டில் சில பிரச்சினைகள் இருந்து வந்ததையறிந்த சத்யாவதி உடனே சென்று லட்சுமி பேசியுள்ளார். உங்கள் வீட்டில் தோஷம் இருக்கு இதனை போக்க அருள்வாக்கு சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன்.
வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த தோஷத்தை கழிக்க வேண்டும். ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று கூறி காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
எலிமிச்சை சாமியார்
அங்கே ஒரு சாமியார் அருள்வாக்கை சொல்லி, ஒரு எலுமிச்சை பழத்தை லட்சுமியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
ஆனால், வீட்டை சுற்றி அத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது, அந்த ஒரே ஒரு எலுமிச்சம்பழத்தால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
உடனே, சத்யாவதி தானே பரிகார பூஜை செய்வதாக கூறி லட்சுமியிடம் இருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இப்படியே ஏதாவது ஒரு பூஜை செலவு சொல்லி, அடிக்கடி லட்சுமியிடம் பணம் கேட்டு வந்துள்ளார். லட்சுமியால் ஒருகட்டத்தில் பணம் கொடுக்க முடியாத சூழல் வந்துள்ளது.
லட்சிமிக்கு வந்த மிரட்டல்
அதற்கு சத்யாவதி, "பணம் தராவிட்டால் உங்கள் பிள்ளைகள் இறந்துவிட வாய்ப்புள்ளது" என்று மிரட்டியிருக்கிறார். இதனால் லட்சுமியும் அவரது மாமியாரும் பல தவணை நேரடியாகவும், ரூ.20 லட்சம் ரொக்கபணம், 37 பவுன் நகைகளை தந்தார்களாம். அதுவும் கூகுள் பே மூலமாக தந்திருக்கிறார்கள்.
வாங்கிய பணத்துக்கு பூஜை செய்வது போல சத்யாவதி நடித்துள்ளார். இந்த பூஜை உண்மை என்று நம்ப வேண்டும் என்பதற்காகவே, லட்சுமியின் மகளை பளாரென கன்னத்தில் அறைந்து துன்புறுத்தியுள்ளார்.
மகளை துன்புறுத்திய சத்யாவதி
அத்துடன் கம்பியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்துள்ளார். அந்த குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, அதை பற்றி சத்யாவதியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் பூஜை பலிக்காது என்று மிரட்டியுள்ளார்.
இதில் சோகம் என்னவென்றால், கடைசிவரை வரை லட்சுமி குடும்பத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதுதான். இதனால் அதிர்ந்து போன லட்சுமி இது குறித்து தன்வந்திரி நகர் போலீசில் புகார் தந்தார்.
போலீஸில் சிக்கிய ஆசாமி
போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் சத்யவதி, புதுச்சேரி நைநார்மண்டபம் பகுதியில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் ஒளிந்து கொண்டார்.
பிறகு தீவிர தேடுதலில் போலீசார் தலைமறைவாக இருந்த சத்யவதியை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.