பட்டன் போனுடன் வந்த பகத் பாசில்- அதன் விலை எத்தனை லட்சம் தெரியுமா?
பகத் பாசில் பயன்படுத்தும் பட்டன் போனின் விலை விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஃபஹத் ஃபாசில்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகர் தான் ஃபஹத் ஃபாசில்.
இவர், நடிப்பில் தமிழகத்திலும் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் நடிகர் தற்போது பட்டன் போனில் பேசிக் கொண்டிருந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த தொலைபேசியை பார்த்த பலரும் கையில் அடங்கும் எளிய கீபேட் போன் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அது ஆடம்பர பிராண்டான Vertu போன் என தெரிய வந்துள்ளது. அதன் விலை விவரங்களையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Vertu போனில் என்ன ஸ்பெஷல்?
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட போன் தயாரிப்பாளர்கள் தான் Vertu. கடந்த 1998-ல் தொடங்கப்பட்ட Vertu, நோக்கியா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்ததாக தகவல் கூறுகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷையரில் இருந்த தொழிற்சாலையில் Vertu போன்கள் தயாரிக்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் போனின் செயல்பாட்டை விட கைவினைத்திறன், ஸ்டைல், சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தி விற்பனை செய்யப்பட்டது.
தற்போது Vertuவில் உள்ள சிறப்புக்களால் நியூயார்க், துபாய், மாஸ்கோ, ஃப்ராங்க்ஃபர்ட், ஹாங்காங், பாரிஸ், சிங்கப்பூர் என பல இடங்களில் Vertu கிளைகள் உருவாக்கம் பெற்றுள்ளன.
திவாலான Vertu
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், நோக்கியா நிறுவனம் Vertuவை இக்விட்டி VI என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டது. ஆனால் 10% பங்குகளை தன்வசம் வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
விலை எவ்வளவு தெரியுமா?
இதனை தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு இறுதியில், Vertuவுக்கு 3,50,000 வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அதன் பின்னர், 2015-ல், இக்விட்டி நிறுவனம் Vertuவை ஹாங்காங்கைச் சேர்ந்த கோடின் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இப்படி படிபடியாக கைமாறிய Vertu கடந்த 2022ஆம் ஆண்டு டூயல் ஏஐ மாடல்களை வெளியிட்டது. வெப் 3.0 தொழில்நுட்பம், பில்ட்-இன் இமேஜ் டூ என்எஃப்டி கன்வெர்ட்டர் கொண்ட "உலகின் முதல் வெப்3 போன்" என்று Vertu என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் இருப்பது Vertu அசென்ட் சீரிஸ் போன் தான். Vertu அசென்ட் சீரிஸ் போன்கள் விலை இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் என்றும் தெரியவந்துள்ளது.
விலை அறிந்த பின்னர் இணையவாசிகள், “ஃபஹத் ஃபாசில் பட்டன் போனையே 10 லட்சம் கொடுத்து வாங்கி உள்ளாரா?” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
