தலையில் பலத்த காயம்! மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல CSK வீரர்: வீடியோ காட்சிகள் வெளியானது
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது காயம் அடைந்த பிரபல வீரர் பாஃப் டூப்ளசிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் எனப்படும் பி.எஸ்.எல். போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன.
இத்தொடரின் நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். இதனால் பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது.
குவெட்டா அணியில் இடம்பெற்ற டூப்ளசிஸ் அதனை தடுக்க ஓடினார், அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் டூப்ளசிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார், இவர் விரைவில் குணமடைய வேண்டி #GetWellSoon என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குணமாகும்வரை டூப்ளசிஸ் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது, இவருக்கு பதிலாக அயூப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Praying to Almighty for the speedy recovery and a good health for #FafduPlessis
— An Indian 🇮🇳💎 (@real_farooque07) June 12, 2021
May he #getwellsoon ! pic.twitter.com/TT1JaTGFCH