பிக் பாஸ் அசீம் தொடர்பான உண்மைகளை அப்பட்டமாக கூறிய சின்னத்திரை பிரபலம்! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அசீம், ஷீட்டிங் ஸ்பார்ட்டில் செய்த லீலைகள் தொடர்பாக பிரபல சின்னத்திரை நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிகமான நாமினேஷன்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்த போட்டியிலிருந்து சுமார் 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சுமார் ஒன்பது வாரங்களில் அதிகமாக நாமினேஷனுக்கு சென்ற போட்டியாளராக அசீம் பாரக்கப்படுகிறார்.
காரணம் இவர் மற்றைய போட்டியாளர்களை ஏளனமாக பேசுதல், போட்டியாளர்களை கொச்சைப்படுத்தும் வார்த்தை பிரயோகம் என்பவற்றை கூறலாம்.
வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
இந்நிலையில் இவர் பிக் பாஸில் மட்டும் தான் இப்படியா? இல்லை ஷீட்டிங்கிலும் இப்படியா? என பிரபல சின்னத்திரை பேட்டியொன்றில் கேட்ட போது அசீம் பற்றிய பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.
அதில், அசிம் 'ஷீட்டிங் ஸ்பார்ட்டிலும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போன்று தான் நடந்துக் கொள்வார். அசீமிற்கு அதிகமாக கோவம் வரும் சீரியலின் இயக்குநரையே அடிக்க சென்றிருக்காராம்.
மேலும் அசீம் பெண்களிடம் கொஞ்சம் தர குறைவாக தான் செயற்படுவார். அவருக்கு மரியாதையாக பேசக்கூட தெரியாது' என அவரின் குறைகள் பலவற்றை அப்பட்டமாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. .இதனை பார்க்கும் அசீம் பிக் பாஸின் வெற்றியாளனாக மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என பதிவிட்டுள்ளனர்.