இவ்வளவு உதவிகள் செய்தாரா விஜயகாந்த்..? ஏழைகளுக்கு இறைவனாக இருந்த உன்னத மனிதனின் வரலாறு
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர், தவிர்க்க முடியாத ஆளுமை, தனிப்பெரும் அரசியல் தலைவர் என மக்களால் கொண்டாடப்படும் விஜயகாந்தின் மிகச்சிறந்த அடையாளம் அனைவருக்கும் உதவுபவர் என்பதுதான்.
விஜயகாந்தை போன்று ஒருவர் இருக்க முடியுமா என்பதே அவருடன் நடித்த, பழகிய பலருக்கும் வியப்பூட்டும் கேள்வியாக இருக்கிறது. சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருந்தார்.
சுயசரிதை
கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர். இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார். சில தமிழ் திரைப்படங்களை தாமே இயக்கி நடித்துள்ளார் விஜயகாந்த்.
14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார்.
பின்னர் 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார்.
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
விஜயகாந்த் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று நூறு சதவீதம் சொல்லலாம். ஏனென்றால், தன்னுடைய படப்பிடிப்பில் தான் என்ன உணவு சாப்பிட்டாலும், அதே உணவு தான் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டியவர் கேப்டன்.
இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகில் பொறியியல் கல்லூரியும், சென்னை கோயம்பேட்டில் திருமண மண்டபமும் உள்ளது. கார்கில் நிவாரண நிதிக்கு ரூ5,00,000 வழங்கிய விஜயகாந்த்,ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு ரூ25,000 நன்கொடை வழங்குகியிருக்கிறார்.
நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மூன்றுசக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்ற உதவிகளை வழங்கியிருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |